மியன்மாரில் மீண்டும் தேர்தல்: இராணுவம் உறுதி

மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும்: இராணுவம் உறுதி

by Bella Dalima 16-02-2021 | 5:52 PM
Colombo (News 1st) மியன்மாரில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுமென அந்நாட்டு இராணுவம் உறுதியளித்துள்ளது. அத்துடன், தேர்தலில் வெற்றி பெறுபவருக்கு ஆட்சியதிகாரத்தை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் கடந்த தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தெரிவித்து இராணுவத்தினால் ஆட்சியதிகாரம் கைப்பற்றப்பட்டது. நிர்வாகத்தலைவர் ஆங் சாங் சூ கி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிக்குமாறும் ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறும் சர்வதேசத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், மியன்மாரில் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஆங் சாங் சூ கிக்கு எதிராக மியன்மார் பொலிஸினால் இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. நாட்டில் வன்முறையை தூண்டியதாக ஆங் சாங் சூ கி மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கனவே, 6 walkie talkie-களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளதுடன், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.