ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை தீர்மானம்: உதய கம்மன்பில

by Staff Writer 03-02-2021 | 2:50 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்சலெட்டின் அறிக்கையை நிராகரிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே எழுத்து மூலம் பதில் வழங்கியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அதனை பகிரங்கப்படுத்தவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் காணப்படும் நிபந்தனைகளை மீறும் வகையில் ஆணையாளர் நாயகத்தால் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.