by Staff Writer 31-01-2021 | 2:27 PM
Colombo (News 1st) அரச பொது நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டி பரீட்சையின் பெறுபேறுகள், அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெரிவுகள் இடம்பெற்ற பின்னர் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் போட்டி பரீட்சை நடத்தப்பட்டது.