by Staff Writer 31-01-2021 | 3:30 PM
Colombo (News 1st) பூண்டுலோயா - கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று (31) முற்பகல் 11 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, எதிர்த் திசையில் பயணித்த டிப்பருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 வயதான இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக பொலிஸார் கூறினர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
டிப்பரின் சாரதியை நீதவான் முன்னிலையில் நாளை (01) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிந்த இளைஞர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.