Colombo (News 1st) கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பிரதேசங்கள் நாளை (01) அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக COIVD – 19 தொற்றை கட்டுப்படுத்தும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த வகையில்,
நாரஹேன்பிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 100 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகத்துவாரம் - அன்றூஸ் வீதி, புனித அன்றூஸ் பகுதி (கீழ்/மேல்) ஆகியவற்றில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.
பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 90 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
