by Staff Writer 28-01-2021 | 4:37 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான 1,869 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
நாட்டில் COVID-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாட்டில் இதுவரை 60,694 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 5,969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், இதுவரை 290 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.