கப்பலில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய அனுமதி கோரல்

MV Eurosun கப்பலில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது

by Staff Writer 26-01-2021 | 4:15 PM
Colombo (News 1st) விபத்திற்குள்ளான MV Eurosun கப்பலில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய அக்கப்பலுக்கு சொந்தமான நிறுவனம், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் அனுமதி கோரியுள்ளது. இது குறித்து அவர்கள் தமது அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கந்தபுர தெரிவித்துள்ளார். கப்பல் காணப்படும் கடற்பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக அப்பகுதியை கண்காணிப்பதில் சிரமங்கள் காணப்படுவதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக நேற்றைய தினம் ஐவரடங்கிய குழு, குறித்த கடற்பிராந்தியத்திற்கு சென்றதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கூறினார். எனினும், கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த கடற்பிராந்தியத்தை கண்காணிக்க முடியவில்லை என சட்டத்தரணி தர்ஷனி லங்கந்தபுர தெரிவித்தார். அபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச்சென்ற MV Eurosun கப்பல் கடந்த 23 ஆம் திகதி விபத்திற்குள்ளானது.