by Staff Writer 22-01-2021 | 8:30 PM
Colombo (News 1st) மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில், பொதுவான நலன்களையும் மதிப்புகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலமும் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதன் மூலமும் அமெரிக்காவுடனான பன்முக உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை நினைவுகூர்ந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, புதிய ஜனாதிபதியினால் உலக அமைதி, வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைய முடியும் என்று தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸிற்கும் ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தியாவுடனான தொடர்பு தெற்காசியாவின் அனைவருக்கும் பெருமை சேர்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.