வடக்கில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வட மாகாணத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மன்னாரில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு

by Bella Dalima 20-01-2021 | 7:37 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் நேற்று 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 45 பேர் வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் 5 பேர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார். இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் இருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் என ஆறுமுகம் கேதீஸ்வரன் கூறினார். இதேவேளை, மன்னாரில் கொரோனா மரணம் ஒன்று பதிவாகியதாகவும், மாவட்டத்தில் பதிவாகிய இரண்டாவது கொரோனா மரணம் இதுவெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.