by Staff Writer 20-01-2021 | 9:01 PM
Colombo (News 1st) சுயாதீன நீதிமன்றத்தின் மூலமே ஜனநாயக சமூகத்தில் சட்டவாட்சி நிலவும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டார்.
புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ வைபவத்தில் கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்றத்தை செயற்படுத்தும் நீதிபதிகளுக்கு அமைவாக நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு மீதான நம்பகத்தன்மை தங்கியுள்ளதென கூறினார்.
நீதிபதிகள் நேர்மைக்கும் சுயாதீனத் தன்மைக்கும் எத்தருணத்திலும் பங்கம் விளைவிக்காமல், மனசாட்சிப் படி பணிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.
ஜனநாயக அரச பொறிமுறையின் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதற்காக பக்கசார்பற்ற, சுயாதீன நீதிமன்றம் அவசியம் எனவும் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா குறிப்பிட்டார்.
நீதிமன்ற நீதிபதிகள் தமது பொறுப்பை நிறைவேற்றும் போது வெளி நிர்வாகம், அழுத்தம், அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்பட வேண்டும் எனவும் சட்ட மா அதிபர் தெரிவித்தார்.
குமுதினி விக்ரமசிங்க, ஷிரான் குணரத்ன மற்றும் திலீப் நவாஸ் ஆகிய மூன்று புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்களை வரவேற்கும் வைபவம் உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது.