கொள்ளுப்பிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் வௌ்ளத்தில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழப்பு 

by Staff Writer 30-12-2020 | 7:48 AM
Colombo (News 1st) கொள்ளுப்பிட்டி - டுப்ளிகேஷன் வீதி பகுதியிலுள்ள கட்டடம் ஒன்றின் முதலாவது தளத்தில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று (30) காலை 6.30 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (29) மாலை பெய்த மழை காரணமாக, குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் முதலாவது மாடியில் நீர் நிரம்பியுள்ளது. அப்பகுதியிலிருந்த ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போதிலும், கீழ் தளத்திலிருந்த ஊழியர் ஒருவருக்கு அப்பகுதியிலிருந்து வௌியேற முடியாமல் போனதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். சுமார் 10 மணித்தியாலங்களாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்