எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்த தடை

மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்த தடை

by Staff Writer 28-12-2020 | 10:29 PM
Colombo (News 1st) மதுசாரம் மற்றும் எத்தனோல் உற்பத்திக்கு சோளம் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், வர்த்தமானியை வௌியிடுமாறு கலால் ஆணையாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் மஞ்சளை அழிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்த போகத்தில் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அதனை கொள்வனவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை நிறுத்தவும் தலையிடுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.