Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக நாளைய தினம் (28) முதல் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு மற்றும் புதுக்கடை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுகள் நாளை அதிகாலை 05 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக காணப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
