ஸ்பெயினில் நால்வருக்கு புதிய வகை கொரோனா தொற்று

ஸ்பெயினில் நால்வருக்கு புதிய வகை கொரோனா தொற்று

by Bella Dalima 26-12-2020 | 8:56 PM
Colombo (News 1st) புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நால்வர் ஸ்பெயினில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டென்மார்க், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸை தொடர்ந்து புதிய வகை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும். ஸ்பெயினின் மெட்ரிட்டிலேயே தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் அண்மைய நாட்களில் பிரித்தானியாவில் இருந்து திரும்பியவர்கள் என ஸ்பெயின் பிரதி சுகாதார தலைவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்றினால் உலக நாடுகள் பலவும் பயணத்தடைகளை அமுல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.