கறுப்புப் பட்டியலில் மேலும் சில சீன நிறுவனங்கள் 

அமெரிக்க கறுப்புப் பட்டியலில் மேலும் சில சீன நிறுவனங்கள் 

by Bella Dalima 18-12-2020 | 5:53 PM
சீனாவின் மேலும் சில நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு அமெரிக்கா தயாராகியுள்ளது. சீனாவின் பிரபல்யமிக்க தொழில்நுட்பக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனமும் இதில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதி பதவியேற்க ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த நகர்வு முன்னெடுக்கப்படவுள்ளது. சீனாவிற்கு உரித்தான சுமார் 80 நிறுவனங்கள் இவ்வாறு கறுப்புப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமெரிக்க வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உண்மையெனில், சீனா மீதான அமெரிக்காவின் அடக்குமுறைக்கான ஆதாரமாக இது அமையும் என பீஜிங் தெரிவித்துள்ளது. தமது நாட்டு நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படுமாயின், தமது உரிமைகளை பாதுகாப்பதற்கு போராடப் போவதாக சீன வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இதுவரை 275-க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் இணைத்துள்ளது.