by Staff Writer 16-12-2020 | 1:09 PM
Colombo (News 1st) திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லா மொஹமட் மஹ்ரூப் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருடன் கைதி செய்யப்பட்ட மாத்தளை பகுதியை சேர்ந்த பாரூக் மொஹமட் அஸ்லாமும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இருவரையும் கொழும்பு புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் லங்கா சதொச நிறுவனத்தில் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.