சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 பேர் கைது 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 பேர் கைது 

by Staff Writer 15-12-2020 | 2:05 PM
Colombo (News 1st) நாட்டின் கடற்பிராந்தியங்கள் சிலவற்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். நவம்பர் 19, 26 மற்றும் டிசம்பர் முதலாம், 07 ஆம் திகதிகளில் மன்னார் வலைப்பாடு, பள்ளமுனை மற்றும் சௌத்பார் ஆகிய பகுதிகளை அண்மித்த கடற்பிராந்தியங்களில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 32 பேர் கைது செய்யப்பட்டதுடன் 08 மீனவ படகுகளும் தடை செய்யப்பட்ட 08 வலைகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.