by Staff Writer 04-12-2020 | 10:13 PM
Colombo (News 1st) சிறைச்சாலைகளில் COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் மஹர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு, விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆலோசனை வழங்கியுள்ளார்.
அங்கு அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்துமாறு ஆலோசனை வழங்குமாறும் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் பரவுகின்றமை தொடர்பில் இன்று (04) நடைபெற்ற கலந்துரையாடலின்போது இராஜாங்க அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.