by Staff Writer 30-11-2020 | 7:44 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - தையிட்டி கடலில் குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பலாலி பொலிஸ் பிரிவின் தையிட்டி கடற்பகுதிக்கு நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் குளிக்கச் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களில் 19 வயதான இரு இளைஞர்கள் காணாமற்போனதுடன், ஒருவரின் சடலம் நேற்று மாலையும், மற்றையவரின் சடலம் இன்று காலையும் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியது.
நீரில் மூழ்கி உயிரிழந்த சிவசந்திரன் சிவநிரோஜன், யாழ்ப்பாணம் மகேஷ்வராக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்று வந்தார்.
மாசிலாமணி தவச்செல்வன் திருமண பந்தத்தில் இணைந்து ஒரு வாரத்தின் பின்னர், இந்தத் துயரத்தை எதிர்நோக்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இருவரின் சடலங்களும் யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்து, பிரதேச பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.