by Staff Writer 25-11-2020 | 5:29 PM
Colombo (News 1st) அதிகார பரிமாற்றம் தொடர்பில் வௌ்ளை மாளிகை தீவிரமாக உதவி வருவதாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
எவ்வித முணுமுணுப்புமின்றி வௌ்ளை மாளிகை ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு முறையாக ஆட்சி அதிகாரத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 20 அம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ள நிலையில், முக்கிய பதவிகளுக்கான தமது தெரிவு தொடர்பில் பைடன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக தாம் பதவி ஏற்பதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வௌ்ளை மாளிகை வழங்குவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.