by Staff Writer 23-11-2020 | 1:00 PM
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள பாடசாலைகள் இன்று (23) மீள திறக்கப்பட்டுள்ளன.
இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தப்படுவதற்கான நடைமுறை சிக்கல்கள் காரணமாக, தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுகின்ற நிலையில், எவ்வாறு செயற்பட வேண்டும் என வௌியிடப்பட்ட வழிகாட்டல்கள் இம்முறையும் பின்பற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் மாணவர்களுக்காக பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.