by Staff Writer 21-11-2020 | 5:00 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 617 வரை அதிகரித்துள்ளது.
சிறைச்சாலைகளில் இன்று (21) மேலும் 63 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சிறைக்கைதிகள் 578 பேர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் 39 பேர் இதில் அடங்குவதாக
சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையிலேயே அதிகளவானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 236 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போகம்பரை பழைய சிறைச்சாலையில் 170 பேரும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 120 பேரும் பூசா சிறைச்சாலையில் 49 பேரும் குருவிட்ட சிறைச்சாலையில் 16 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பூசா சிறைச்சாலையில் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட 11 பேரும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய கைதிகள் மற்றும் அதிகாரிகள் கல்லேல்ல, வெலிகந்த, கந்தக்காடு மற்றும் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய அதிகாரிகள் இருவர் மற்றும் கைதிகள் 26 பேர் குணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.