by Staff Writer 21-11-2020 | 9:45 PM
Colombo (News 1st) உலகின் முன்னிலை நாடுகள் கொரோனா தடுப்பூசி தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.
அதில் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் ஆய்வு மிக முக்கியமானது.
அந்த ஆய்வு நடவடிக்கைகளை இலங்கையை பிறப்பிடமாக கொண்ட டொக்டர் மஹேஷி ராமசாமி முன்நின்று நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையை பிறப்பிடமாக கொண்ட டொக்டர் மஹேஷி ராமசாமி ஐக்கிய இராச்சியத்தில் மருத்துவ கல்வியை பயின்றுள்ளார்.
கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் ஆய்வில் இவர் முன்நின்று செயற்படுகின்றார்.
தடுப்பூசி சிகிச்சை தொடர்பில் வௌியாகும் The Lancet என்ற சஞ்சிகையில் அவருடைய பெயர் முதலிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தின் கிரெய்ஸ்ட் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ள மஹேஷி ராமசாமி தற்போது பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும் செயற்படுகின்றார்.
மேகன் மருத்துவ கல்லூரியிலும் பிரதம விரிவுரையாளராக செயற்படும் டொக்டர் மஹேஷி ராமசாமியின் பெற்றோரும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாவர்.
அவரின் தாயாரான பேராசிரியர் மந்திரீ சமரநாயக்க ராமசாமி கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் என்பதுடன், அவரின் தந்தையான ரஞ்சன் ராமசாமியும் ஓர் விஞ்ஞானியாவார்.