by Staff Writer 20-11-2020 | 12:27 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கொழும்பு IDH வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
எஹலியகொடை பகுதியை சேர்ந்த தாய் ஒருவரே தனது இரண்டரை வயதிற்கும் குறைந்த மகனுடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டநிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களென அவர் கூறினார்.
குறித்த பெண் எஹலியகொடையில் உள்ள தமது வீட்டாரிடம் குழந்தையை ஒப்படைத்து விட்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நேற்றிரவு இவர்கள் தப்பிச்சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தப்பிச்சென்றவரைத் தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.