by Staff Writer 20-11-2020 | 1:18 PM
Colombo (News 1st) இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஊட்டச்சத்து ஊசி மருந்துகளை இந்திய கடலோர காவற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
தங்கச்சி மடம் கடற்கரை பகுதியிலிருந்து நேற்றிரவு சுமார் 6000 ஊட்டச்சத்து ஊசி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த கடத்தல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர காவற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.