கங்கைகளை பாதுகாக்க திட்டம்

சுற்றாடல் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் தொழிற்சாலைகள்

by Staff Writer 04-11-2020 | 4:09 PM
Colombo (News 1st) கங்கைகளின் இரு மருங்கிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள், சுற்றுலா ஹோட்டல்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் 60 வீதத்திற்கும் மேற்பட்டவை சுற்றாடல் அனுமதிப்பத்திரம் இன்றி இயங்குவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொண்ட தொழிற்சாலைகளும் பரிந்துரைகளுக்கேற்ப செயற்படுவதில்லை என அமைச்சு அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது. இதனால் நாட்டிலுள்ள கங்கைகளை அண்மித்த சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் கங்கைகளை பாதுகாக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 3,200 கோடி ரூபா செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.