Colombo (News 1st) இலங்கையில் 22 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.
கொழும்பு - ஜம்பட்டாதெருவில் தமது வீட்டில் உயிரிழந்த 68 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை PCR பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் நியூமோனியா நோய் நிலைமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி ஜம்பட்டாதெருவிலுள்ள வீட்டில் உயிரிழந்த அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு COVID - 19 தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டதாக தொற்றுநோய் ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே COVID - 19 தொற்று ஏற்பட்டிருந்ததுடன், ஏனைய உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
