by Staff Writer 29-10-2020 | 8:42 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள 350 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 28 பிரிவுகளில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் கலந்துரையாடலில் வௌிக்கொண்டு வரப்பட்டது.
COVID ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதியின் தலைமையில் கூடியது.
COVID-19 பரவலைத் தடுக்கும் நோக்கில் 41 ஆயிரம் பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றைய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, COVID-19 தொடர்பிலான பிந்திய மற்றும் அத்தியாவசியமான விடயங்களை அறிந்துகொள்வதற்கான செயலியும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
குறித்த செயலி நோய்த்தொற்று, குணமடைதல், தனிமைப்படுத்தல், PCR பரிசோதனை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கியது என மேல் மாகாண சுகாதாரப் பிரிவினர் ஜனாதிபதிக்கு தௌிவுபடுத்தினர்.