அதிவேக வீதியில் போக்குவரத்தை வரையறுக்க திட்டம்

தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்தை வரையறுக்க தீர்மானம்

by Staff Writer 28-10-2020 | 6:27 PM
Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியில் நாளை (29) தொடக்கம் பஸ் போக்குவரத்தை வரையறுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கடவத்தை நுழைவாயிலின் ஊடாக அதிவேக வீதியில் பஸ்கள் உள்நுழைவது தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் நிலான் மிராண்டா குறிப்பிட்டார். கொட்டாவை மற்றும் கடுவலை நுழைவாயிலினூடாக வழமைபோல அதிவேக வீதியில் பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும், மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளமையால், நாளை நள்ளிரவு முதல் இந்த நுழைவாயில்கள் ஊடாகவும் போக்குவரத்தை முன்னெடுக்க முடியாது என தெற்கு அதிவேக வீதியின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் நிலான் மிராண்டா தெரிவித்தார்.