by Staff Writer 25-10-2020 | 10:07 PM
Colombo (News 1st) இன்று (25) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பஸ் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை (26) முதல் பிரதான மார்க்கம், களனி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் அலுவலக ரயில், தூர செவை, கடுகதி மற்றும் தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, நாளைய தினம் (26) முதல் கரையோர மார்க்கத்தில் 6 ரயில் சேவைகளும் (கொள்ளுப்பிட்டி வரை), உயர்தர மாணவர்களுக்கான பிரதான மற்றும் சிலாபம் மார்க்கங்களில் 12 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.