மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 22-10-2020 | 6:05 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 50 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்திலுள்ள இரண்டு தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களாவர். பேலியகொடை மொத்த மீன் சந்தையிலும் இன்று 06 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்புடைய பட்டியலை சேர்ந்த 22 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1,028 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 2,454 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய 3,561 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது