by Bella Dalima 07-10-2020 | 4:00 PM
Colombo (News 1st) தமிழக சட்டமன்றத்திற்கான அடுத்த வருட தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமியை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
அடுத்த முதல்வர் வேட்பாளர் தொடர்பில் வௌியிடப்பட்ட ஊகங்கள் மற்றும் கருத்துக்களையடுத்து இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட எடப்பாடி கே. பழனிசாமி, அடுத்த வருடம் இடம்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
முதல்வர் வேட்பாளர் தொடர்பில் இன்று அதிகாலை 3.30 வரை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.