by Fazlullah Mubarak 04-10-2020 | 8:59 PM
கம்பஹா மாவட்டத்தின் வேயங்கொட பொலிஸ் பிரிவிற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வேயங்கொடை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவப் பேச்சாளர் லெப்டினன் ஜேனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ் பிரவுகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.