by Staff Writer 04-10-2020 | 1:38 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனங்கள் நாளை (05) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளன.
களனி பல்கலைக்கழகம், கம்பஹா விக்ரமாரச்சி ஆயுர்வேத மருத்துவ கல்லூரி, நைவல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியன ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனை முன்னிட்டு விடுதிகளிலிருந்து வௌியேறுமாறு மாணவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊடரங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகள், தனியார் பிரத்தியேக வகுப்புகள் மற்றும் பிரிவேனாக்களை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.