by Staff Writer 22-09-2020 | 8:10 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரருக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பன்குடாவௌி பகுதியில் நேற்று (21) அரச உத்தியோகத்தர்கள் சிலரை தேரர் தாக்கியமைக்கும் தடுத்து வைத்தமைக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த காணிகளின் எல்லையிடும் பணிகள் தாமதமடைவதாகக் கூறி தேரர் நேற்று அதிகாரிகளுக்கு எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை நில அளவை திணைக்கள அதிகாரிகள், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் பன்குடாவெளி பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
தேரருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கரடியனாறு பொலிஸாரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்தனர்.