ரைகம் விருது வழங்கல் விழா 2019: அதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு

by Staff Writer 19-09-2020 | 9:01 PM
Colombo (News 1st) 2019 ஆம் ஆண்டிற்கான ரைகம் விருது வழங்கல் விழா கொழும்பில் இன்று (19) நடைபெற்றது. வருடத்தின் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருதினை நியூஸ்ஃபெஸ்டின் சிசிரகுமார் கிரிஷாந்த்ராஜ் பெற்றுக்கொண்டார் ஜூரியின் விசேட விருதினை நியூஸ்ஃபெஸ்டின் திலக்ஷனி மதுவந்தி சுவீகரித்தார். சிறந்த சிங்கள செய்தி வாசிப்பாளருக்கான விருது சானு திசாநாயக்க வசமானது. சிறந்த ஆங்கில செய்தி வாசிப்பாளர் விருதை அஸ்ரா ஹஷான் பெற்றுக்கொண்டார். ஆண்டின் அதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவானது. இந்த விருது வழங்கல் விழாவில் அதிக விருதுகளை வென்ற ஊடகமாக சிரச தொலைக்காட்சி பதிவானது.