நக்கில்ஸ் மலைத்தொடரில் மீண்டும் காடழிப்பு

நக்கில்ஸ் மலைத்தொடரில் மீண்டும் காடழிப்பு

by Staff Writer 13-09-2020 | 8:13 PM
Colombo (News 1st) சுற்றாடல் சட்டங்களை மீறி மற்றுமொரு வனப் பகுதியை அழிக்கும் செயற்பாடு இன்று (13) பதிவானது. நக்கில்ஸ் வனப் பகுதியின் பன்வில மேல் பகுதியில் 5 ஏக்கருக்கும் அதிகமான பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மரக்கறி செய்கைக்காக இந்த வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இதுவொரு தனியார் காணி என காட்டை அழித்தவர்கள் தெரிவித்ததாக திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அதற்கான எவ்வித ஆவணங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை. சரணாலயத்திற்குள் தனியார் காணிகள் தொடர்பான தகவல்கள் இருந்தாலும், இந்தக் காணி தொடர்பில் எவ்வித தகவல்களும் இல்லை என வன பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் தெரிவித்தனர். மிகவும் உணர்திறான வலயத்தை அழிப்பது தொடர்பில் எவ்வித நிறுவனங்களுக்கும் அறிவிக்காமை அதிர்ச்சிக்குரிய விடயம் என சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.