கறுப்பினத்தவர் கொலை: 7 பொலிஸார் இடைநிறுத்தம்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் கொலையுடன் தொடர்புடைய 7 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

by Bella Dalima 04-09-2020 | 4:07 PM
Colombo (News 1st) அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் கொலையுடன் தொடர்புடைய 07 பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். இனவாதமே இந்தக் கொலைக்கு காரணமென ரொச்செஸ்டர் ஆளுநரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஒருவரால் 41 வயதான டானியல் ப்ரூட் (Daniel Prude) எனும் கறுப்பினத்தவர் கடந்த மார்ச் மாதம் கொல்லப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி ஒருவரால் ஜோர்ஜ் ப்ளொய்ட் எனும் கறுப்பின பிரஜை கொல்லப்பட்டதன் பின்னர் உலகளாவிய ரீதியில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே டானியல் ப்ரூட் (Daniel Prude) என்ற கறுப்பின நபரும் பொலிஸாரால் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தற்போது வௌிக்கொணர்ந்துள்ளனர்.