by Staff Writer 03-09-2020 | 8:32 PM
Colombo (News 1st) இலங்கை பொலிஸார் 154 ஆவது ஆண்டு பூர்த்தியை இன்று கொண்டாடுகின்றனர்.
இன, மத, குல, உயர்வு, தாழ்வு எனும் பேதங்களின்றி மக்களுக்காக தம்மை அர்ப்பணித்த இலங்கை பொலிஸார் சட்டத்தை பாதுகாக்கும் விதம் பாராட்டுக்குரியது.
30 வருட யுத்த காலத்திலும் தமது பணியை செவ்வனே செய்த பொலிஸார் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்காக உயிர்த்தியாகம் செய்து தமது பொறுப்பை நிறைவேற்றினர்.
COVID-19 தொற்றுக்காலத்தில் இன்னுயிரை துச்சமென எண்ணி நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அவர்கள் ஆற்றிய சேவைக்கு முழு தேசமும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
பாதாள உலகக் கோஷ்டி, போதைவஸ்து, திருட்டுக்களை தடுத்து அமைதியான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக புதிய உத்வேகத்துடன் இலங்கை பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்.
இரவு - பகல் பாராமல் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் வீரர்களே தேசத்தின் கௌரவம் உங்களுக்கு உரித்தாகுக!