பாட்டலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாட்டலிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Bella Dalima 28-08-2020 | 5:39 PM
Colombo (News 1st) வாகன விபத்தில் இளைஞர் ஒருவரைக் காயப்படுத்தியமை, அந்த விபத்து தொடர்பில் பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் அவரின் சாரதி துஷித திலும் குமார, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அஸ்மடல்ல ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலத்துங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணையை ஒத்திவைத்தி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இன்றைய வழக்கு விசாரணையின் போது மூன்று பிரதிவாதிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர். கொழும்பு இராஜகிரிய பகுதியில் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி அசமந்தப்போக்குடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை, விபத்தை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை , சம்பவம் தொடர்பான வழக்கில் பொய் சாட்சியத்தை உருவாக்கியமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.