மின்சாரம் துண்டிப்பு:இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

மின்சாரம் துண்டிப்பு: விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

by Staff Writer 27-08-2020 | 4:09 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அறிக்கையில் இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக நம்பகமான செயற்பாடு மற்றும் பராமரிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் உட்பட 11 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் கடந்த 17 ஆம் திகதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தின் பொது பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் தாமதமே அதற்கான காரணமென விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.