வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக புதிய திட்டம்

வௌிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக புதிய திட்டம்

by Staff Writer 24-08-2020 | 6:54 PM
Colombo (News 1st) வௌிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 05 வருட கால திட்டமொன்றை வகுக்கவுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தை தயாரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் தற்காலிக பின்னடைவை சந்தித்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை அடுத்த வருட ஆரம்பத்திற்குள் மீள கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிப்பு வழங்கும் நிறுவனமாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.