கொரியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

தொழில் ஒப்பந்தம் காலாவதி: கொரியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

by Staff Writer 18-08-2020 | 4:29 PM
Colombo (News 1st) தொழில் ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையில் கொரியாவில் தங்கியுள்ள இலங்கையர்களை இரண்டு மாதங்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். விசேட விமான சேவையை முன்னெடுத்து 1,600 இலங்கையர்கள் கொரியாவிலிருந்து அழைத்துவரப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டிற்கு அழைத்துவரப்படுவோரை தனிமைப்படுத்த வௌிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொரியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்பும் வரை, நாட்டிலிருந்து கொரியாவிற்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்களை அனுப்பாதிருக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரியாவின் மனித வள அபிவிருத்தி நிலையத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி கிம் வோன் சோக்குடன் (Kim Won Seok) தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இவற்றைத் தெரிவித்துள்ளார். கொரியாவிற்கு தொழிலுக்கு செல்லும் எதிர்பார்பிலுள்ள 200 பேருக்கான விசேட பயிற்சி நிலையத்தை ஸ்தாபிக்கவும் இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.