மட்டக்களப்பில் தங்க நகைகள் கொள்ளை: நால்வர் கைது

மட்டக்களப்பில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை: நால்வர் கைது

by Staff Writer 14-08-2020 | 5:12 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற பாரிய தங்கநகைக் கொள்ளை தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் வேறு நகைக்கடைகளின் இரண்டு உரிமையாளர்களும் அடங்கலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல தங்கநகை விற்பனை நிலையத்தை உடைத்து சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் நான்கரை இலட்சம் ரூபா பணமும் கடந்த 03 ஆம் திகதி கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்போது, கொள்ளையிடப்பட்ட ஏழரைக் கிலோ தங்க ஆபரணங்களும் இரண்டரை இலட்சம் ரூபா பணமும் இன்று பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவர் ஏற்கனவே திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.