இரண்டு இலட்சம் ஏக்கர் அரச காணிக்கு முதலீட்டாளர்களைத் தேடும் மஹிந்தானந்த அளுத்கமகே

by Bella Dalima 14-08-2020 | 8:00 PM
Colombo (News 1st) விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முதலீட்டாளர்களுக்கு அழைப்பொன்றை விடுத்துள்ளார். மகாவலி அதிகார சபை, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஆகியவற்றுக்கு உரித்தான இரண்டு இலட்சம் ஏக்கர் காணி பயன்பாடின்றிக் காணப்படுவதாகவும் அக்காணிகளில் விவசாயத்துறை முதலீடுகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் என்ற வகையில் அழைப்பு விடுப்பதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார். அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்ற நிகழ்வின் போது அமைச்சர் இந்த அழைப்பை விடுத்தார்.