by Chandrasekaram Chandravadani 06-08-2020 | 12:29 PM
பிரபல பாடகரும் நடிகருமான S.P. பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இலேசான சளியும் காய்ச்சலும் ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டதாவும் ஓரிரு நாட்களில் தான் வீடு திரும்பிவிடுவதாகவும் அவர் தனது முகப்புத்தகம் வாயிலாக காணொளி ஒன்றின் மூலம் தனது இரகசிகர்களுக்கு தௌிவுபடுத்தியுள்ளார்.