சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் நாடாக இலங்கை

சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் நாடாக இலங்கையை மாற்றுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 02-08-2020 | 7:17 PM
Colombo (News 1st) சர்வதேச தொடர்பு மையமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 'நான்கு பாரிய நகர' திட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தையும் இணைக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 'நான்கு பாரிய வர்த்தக நகர' திட்டத்தில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களும் உள்வாங்கப்படுகின்றன. குறித்த நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி பொருளாதார தாழ்வாரத்தை நிர்மாணித்து சர்வதேச சந்தையுடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குடிநீர் பிரச்சினை மற்றும் காட்டு யானை அச்சுறுத்தல்களுக்கு தீர்வாக முறையான மற்றும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உறுதியளித்துள்ளார்.