குடு அஞ்சுவின் உதவியாளர் கைது

பாதாளக்குழு உறுப்பினர் குடு அஞ்சுவின் உதவியாளர் அசங்க கைது

by Staff Writer 01-08-2020 | 7:07 PM
Colombo (News 1st) பாதாளக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என்பவரின் உதவியாளரான அசங்க கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பஞ்சிகாவத்தையில் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீகொட தஹம் மாவத்தையில் சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றிலிருந்து வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியொன்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 10 ரவைகளும் 09 மில்லிமீட்டர் அளவிலான 10 ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 33 வயதான சந்தேகநபர் அங்குலானை பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் குறிப்பிட்டனர். 2016 ஆம் ஆண்டு பிரியந்தலை பொலிஸ் பிரிவில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் சந்தேகநபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.