by Staff Writer 31-07-2020 | 6:00 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மொஹமட் ரூமிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வௌ்ளை வேன் ஊடகசந்திப்பு தொடர்பில் இவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய இருவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்கு சட்ட மா அதிபர் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த இரண்டு சந்தேகநபர்களையும் சாட்சியாளர்களாக பெயரிடுவதாகவும் சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.