by Staff Writer 31-07-2020 | 4:58 PM
Colombo (News 1st) ஊழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான வீதியிலுள்ள பாலத்திற்கருகில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால், துறைமுக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியாருக்கு தாரைவார்க்க வேண்டாம் என கோரி துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு துறைமுக செயற்பாடுகளை துறைமுகங்கள் அதிகார சபையின் கீழ் ஆரம்பிக்குமாறு வலியுறுத்தி ஊழியர்களால் தொடர்ந்து மூன்று நாட்களாக சத்தியாக்கிரகப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.